சட்டமூலத்தால் தேர்தலுக்கு பாதிப்பு – சஜித் சபையில் எடுத்துரைப்பு

0
192

தேர்தல் பண வரம்புச் சட்டத்தில் சில விடயங்கள் திருப்திகரமாகவோ குறையாகவோ திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருந்தாலும், பரந்த அர்த்தத்தில் இது ஒரு நல்ல சட்டமூலம் என்றும், முறைமை மாற்றத்திற்கும் இது முக்கியமானது என்று கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதை பேச்சுவார்த்தை மூலம் செய்ய முடியும் எனவும் கூறியுள்ளார்.

இந்த சட்டமூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், உள்ளூராட்சி வாக்குகள் தொடர்பாக பணம் வைப்புச் செய்யப்படுவதால், அதை செயல்படுத்தும் நேரத்தில் சிக்கல் இருப்பதாகவும், இது குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இந்த சட்டமூலம் மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கு இடையூறாக உள்ளதென இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வரைவின் பிரகாரம் வேட்பாளர்கள் தங்களின் செலவுகள் தொடர்பான முறையான அறிக்கையை வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு சமர்ப்பிக்காவிடின் அது குற்றம் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த வரைவு நிறைவேற்றப்பட்டதன் மூலம் விதிமுறைகள் அமுல்படுத்தப்படுவது மார்ச் முதல் வாரத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு இடையூறாக அமையும் எனவும் இதன் மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் சதித்திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதனால் மக்களின் ஜனநாயக உரிமை மீறப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here