சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) அழைப்பு விடுக்கப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக ஒருநாள் சேவையின் ஊடாக நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.