Sunday, April 28, 2024

Latest Posts

மட்டக்களப்பு புணானை விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலைக்கழகத்தின் தொடக்க விழா நிகழ்வுகள்

மட்டக்களப்பு புணானை விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலைக்கழகத்தின் தொடக்க விழா நிகழ்வுகள் இன்று18 வியாழக்கிழமை குறித்த பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் கிழக்குமாகாண சபை ஆளுனருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.கிஸ்புல்லா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வுகள் யாவும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு சர்வமத குருமார்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமானது.மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவு அனுமதி பத்திரம் சம்பிரதாய பூர்வமாக கலாநிதி எம்.எல.எ.எம்.கிஸ்புல்லா ஆசியுடன் வழங்கிகைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் குறித்த பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்தினசேகர,SLTC பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் வேரஞ்சன் கருணாரத்தின, SLTC யின் IT பீடாதிபதி கலாநிதி சம்பத்டிகல, தலைமை அதிகாரி கலாநிதி அஸ்மின்,செலாஸ் கொம் நிறுவன முன்னாள் தவிசாளர் ஆசிக் முகமட் அலி,ஆகியோர்கள் கொளரவ அதிதிகளாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கப்படும் விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலைக்கழகத்தின் எதிர்கால கல்வி தொடர்பான விடயங்கள்,வெளிநாட்டு வேலை வாய்ப்பு,சர்வதேச பல்கலைக்கழக தரத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆலோசனைகளை முன்வைத்து உரையாற்றினார்கள்.

முதலாம் கட்ட அனுமதியில் நாடு பூராகவும் இருந்து மூவினத்தைச் சேர்ந்த 700 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 3000 பேருக்கு அனுமதி உள்ளதாகவும் நூலகம்,தங்குமிட வசதிகள் பொழுதுபோக்கு,சுகாதாரம்,உடற்பயிற்சி,மருத்துவம் என பல்வேறு வசதிகள் கொண்டமைந்த சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகமாகும்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.