குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

Date:

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

மேல் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான குற்ற கும்பல்கள் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

52 குற்ற கும்பல்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனினும் இந்த கும்பல்கள் ஒவ்வொன்றும் ஒன்றாக செயல்பட்டு பின்னர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக பிரிந்து செயற்படுவதாக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். 

சில கும்பல்கள் அவர்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 100 பொலிஸ் அதிகாரிகளை கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு தவறான நடத்தைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஆதாரங்களை பெற்ற பின்னர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...

அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64...

இலங்கை மத்திய வங்கி யின் உத்தரவு

இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில்...