பாதாள உலகக் குழு தலைவர் வீட்டு பங்கருக்குள் லட்ச லட்சமாக பணம்

Date:

நீதிமன்ற உத்தரவின் பேரில் வீரகுள பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய சீடரான பட்டா மஞ்சுவின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது.

தற்போது வெளிநாடுகளில் இருந்து இந்த நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் நடத்தப்பட்டு வருகின்றது.

குறித்த வீட்டில் பங்கருக்குள் மறைத்து வைத்திருந்த 22 இலட்சத்திற்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் ஒரு பெண்ணும், ஆண் ஒருவரும் இருந்துள்ளனர். வீட்டில் இருந்த பெண்ணின் கையடக்கத் தொலைபேசி சோதனையிட்டபோது, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் அவர்கள் மூலம் புழக்கத்தில் இருப்பது தெரியவந்ததையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் வீட்டை மேலும் சோதனையிட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண் 29 வயதுடைய கெஹெல்பெத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபரான பெண் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் வலையமைப்பைக் கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

3 கோடி பெறுமதி தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது.!

ரூபாய் 3 கோடியே 65 லட்சத்து 19 ஆயிரத்து பெறுமதியான தங்க...

வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச்சுமைக்கு எதிராக போராட்டம் – 6 பேர் கைது

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வரிச்சுமைக்கு எதிராக மக்கள் போராட்ட...

அஹுங்கல்லையில் 74 வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு

அஹுங்கல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வெஹெர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபரை...

ஞானசார தேரர் கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பூஜ்ஜிய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில்...