இதுவரை 66 ஊழியர்கள் பணிநீக்கம்

Date:

பணி இடைநிறுத்தப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார ஊழியர்கள் குழுவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இடையூறு விளைவித்த மற்றும் கட்டண வாயில்களை அடைத்தமைக்காக 15 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மின்சார சபை நேற்று (19) தெரிவித்துள்ளது.

மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு இயக்கத்தை அண்மையில் ஆரம்பித்திருந்தன.

இதன்படி, மின்சார துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார சபையின் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறிச் செயற்படும் ஊழியர்களை பணி இடைநிறுத்தம் செய்யுமாறும், உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...