அமைச்சரவையில் அடுத்த மாதம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகமான தகவல்களின்படி தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இத்திருத்தத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவிற்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கும் அந்த வட்டாரங்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சுப் பதவிகளுக்கான உறுப்பினர்களின் பட்டியல் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், அமைச்சர் பதவிகள் வழங்கப்படவில்லை.
சில தனியான நிறுவனங்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என அரசாங்கத்தின் முக்கிய நபர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணையை பெற்று மக்களுக்கு சற்று நிவாரணம் வழங்கும் அதேவேளை அமைச்சரவையில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.