கைக்குண்டு சந்தேகநபர் வழங்கிய இரகசிய வாக்குமூலம்!

0
170

அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள லியனகே தயாசேன எனும் சந்தேகநபர், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று இரகசிய வாக்குமூலமொன்றினை வழங்கியிருந்தார்.

குறித்த சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, சந்தேகநபரின் கோரிக்கைக்கு இணங்க கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய முன்னிலையில் சுமார் ஒன்றரை மணித்தியாலம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளரிடம் பெறப்பட்ட 90 நாட்கள் தடுத்து வைக்கும் உத்தரவின் கீழ் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மன்றுக்கு அறிவித்தது.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கைது செய்யப்பட்டுள்ள 6 சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலும் தெரிவித்தது.

இதேவேளை, பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்திலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை வழங்கியதாகக் கூறப்படும் ரனாலே ருவன் எனும் நபர், ஹம்பாந்தோட்டை ரன்ன பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியர் வழங்கிய தகவலுக்கமைய சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிலியந்தலையில் கைது செய்யப்பட்ட வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய அந்த கைக்குண்டு தேவாலயத்தில் வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here