குருநாகல் மேயர் இராஜினாமா!

0
180

குருநாகல் மாநகர சபையின் மேயராக கடமையாற்றிய துஷார சஞ்சீவ விதாரண, டிசம்பர் 31ஆம் திகதி முதல் அப்பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுனர் அட்மிரல் வசந்த கர்ணாகொட கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

குருநாகல் மாநகரசபையின் 2023ஆம் ஆண்டு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஆவணம் தோற்கடிக்கப்பட்டமையே இதற்குக் காரணம்.

இதற்குக் காரணம், 2020ஆம் ஆண்டு 10ஆம் மாதம் 29ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான மாநகர வரவு செலவுத் திட்ட தொகுப்பு மற்றும் அமுலாக்க உத்தரவுகளின்படி, வரவு செலவுத் தொகுப்பு மற்றும் அமுலாக்கம் செய்யப்படவில்லை.

இதன்படி குருநாகல் மாநகரசபையின் மேயர் பதவி வெற்றிடமாக கருதப்பட வேண்டும் என இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here