மார்ச் மாத இடைப்பகுதிக்குள் டொலர் கடன் கிடைக்காவிடின், நாளாந்தம் 04 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இதற்கு தற்போதிலிருந்தே அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
அர்பணிப்புகளுக்கான முன்மாதிரியாக அரசியல் தலைவர்கள் செயற்பட வேண்டும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.
வரையரைக்குட்பட்ட அந்நிய செலாவணியை வைத்துக்கொண்டே எரிபொருள் கொண்டுவரப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏப்ரல் மாதம் மழை பெய்யும் வரை, எரிபொருளூடாகவே மின்னுற்பத்தியை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மேலும் கூறினார்.