மரக்கறிகளை இறக்குமதி செய்யத் தயார்

0
207

மரக்கறி விலைகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து மரக்கறிகளை இறக்குமதி செய்ய தயார் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலாளருக்கும் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உணவுக் கொள்கைக் குழு இது தொடர்பில் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், ஒரு மாதத்திற்குள் காய்கறிகளின் விலை குறைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் மரக்கறிகளை இறக்குமதி செய்தால் தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க முடியும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here