ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் பதவி நீக்கப்படுவாரா?

Date:

2015 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் நடவடிக்கையில் ரூ. 88 இலட்சத்திற்கும் அதிகமான அரச நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக, வழக்கு விசாரணை நிறைவடையும் வரை அவரை பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்குவது உள்ளிட்ட எந்தத் தீர்மானமும் இதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

“அவர் அரச அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் ஏற்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது முந்தைய அரசாங்கத்தினால் அல்ல, எங்கள் அரசாங்கத்தின் கீழ் தான். வழக்கு தொடரப்பட்டிருக்கின்ற நிலையில், அதில் வெளிப்புற தலையீடு உள்ளது என்று யாரும் குற்றஞ்சாட்ட முடியாது. ஆகவே, தற்போது அவரது அமைச்சுப் பதவியைப் பற்றிய எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அவர் தனது அமைச்சுப் பொறுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்,” என அவர் கூறினார்.

இந்தக் கருத்தை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (31) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போது தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...