தொழில் முயற்சிக்காக அமெரிக்கா செல்ல முயற்சித்ததாகவும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா செல்வதற்கு தயாரான நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தன்னை தடுத்து வைத்ததாக குணவர்தன குறிப்பிடுகின்றார்.
வெலிசர நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் துஷான் குணவர்தன சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என குணவர்தன கூறுகிறார்.
தாம் நாட்டுக்கு வெளிப்படுத்திய வௌ்ளை பூண்டு மோசடியில் தான் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.