டயகம லயன் குடியிருப்பில் தீ விபத்து, ஒரு வீடு முற்றாக எரிந்து நாசம்!

0
62

டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் லயன் குடியிருப்பில் இன்று காலை தீ விபத்தில் 14 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த வீட்டில் இருந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்து நிறுத்தினர்.

முழுமையாக நாசமான வீட்டில் வீட்டு உபகரணங்கள், ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் தீக்கிரையாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here