நாட்டிற்கு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான கடமை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இப்பணிக்கு எதிர்காலத்தில் முக்கிய இடம் வழங்கப்படும் என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய அரசியலமைப்பு 1978 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டதாகவும் அதன் பின்னர் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கடந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவிக்கிறார்.
தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததும், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்ததாகவும், எதிர்காலத்தில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என நம்புவதாகவும் பீரிஸ் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு தனது இறுதி அறிக்கையை தயாரித்து வருவதாகவும், அது அடுத்த சில நாட்களில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
அரசியல் சாசனம் என்பது பல தலைமுறைகளாக இருந்து வரும் சட்டமாகும் என்றும், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டின் பெரும்பான்மை மக்களின் சம்மதம் தேவை என்றும் அவர் கூறினார்.