பெலியத்த அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கஹவத்த பிரதேசத்தில் ஐந்து பேரைக் கொல்ல வந்ததாகக் கூறப்படும் கொலையாளிகள் பயணித்த ஜீப் காலி ஹெவ்லொக் பிளேஸ் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தன.
மாத்தறையில் இருந்து விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று இந்த பஜிரோவை கைப்பற்றியுஎள்ளது.
இந்த வாகனத்தில் வந்த சிலர் அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
தங்காலை நீதிமன்றில் வழக்கு ஒன்றுக்கு ஆஜராக வந்து கொண்டிருந்த போதே இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.