பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம், மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டமூலம்,அற்றோனித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றில் செவ்வாய்க்கிழமை கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றம் புதன்கிழமை (24) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே அவர் இவ்வாறு சபைக்கு அறிவித்தார்.
இதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டம், 2024 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டம், 2024 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க அற்றோனித் தத்துவம் (திருத்தச்) சட்டம் மற்றும் 2024 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க மோசடிகளை தடுத்தல் (திருத்தச்) சட்டமாக 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றன என்றார்.