சட்டவிரோத போதைப்பொருட்களை தடுக்கும் புதிய சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!

0
174

சட்டவிரோத போதைப் பொருட்கள் சமூகத்திற்குள் நுழைவதைத் தடுப்பது மற்றும் நாட்டிற்குள் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பது தொடர்பான புதிய சட்டமூலம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார்.

இதன்படி, சட்டமூலத்தின் வரைவு விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சில் இன்று (ஜனவரி 25) பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போது சியமபலபிட்டிய தெரிவித்தார்.

சட்டமூலத்தை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

1912 இல் அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய கலால் கட்டளைச் சட்டம் 1,200 க்கும் மேற்பட்ட திருத்தங்கள் மற்றும் அறிவிப்புகளுடன் மிகவும் காலாவதியாகிவிட்டதால், இந்த பிரச்சினை தொடர்பான புதிய சட்டமூலம் தேவை என்றும் அவர் விளக்கினார்.

புதிய சட்டமூலம் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here