2023ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு தயாராகுமாறு மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரை!

Date:

2023ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு தயாராகுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி பிரதிநிதிகளின் கூட்டம் அண்மையில் பெசில் ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற போதே இந்த பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் ஜனவரி 10, 2022 இல் முடிவடையத் திட்டமிடப்பட்டிருந்ததுடன், உள்ளூராட்சிச் சட்டத்தின் அதிகாரங்களின் அடிப்படையில், அரசாங்கம் அதனை 2023ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி வரை அசாதாரணமான முறையில் நீட்டித்துள்ளது.

வர்த்தமானி அறிவிப்பின் படி 2023ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்குத் தயாராகுமாறு பிரதேச சபைகள், மாநகர சபைகள் மற்றும் மாநகர சபைகளில் உள்ள தமது கட்சியின் பிரதிநிதிகளுக்கு பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 இல் பொதுத் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் தரப்பில் மிகவும் உயர்ந்த அரசியல் தந்திரமாகத் தோன்றலாம்.

உள்ளாட்சி தேர்தல் என்பது கிராம தேர்தல். தேசியத் தேர்தலில் வாக்காளர்கள் நடந்துகொள்ளும் விதம் வேறு. அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிரதேச சபை முறைமையின் படியே நடைபெறுகின்றன. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அப்போதைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது.

அதன்படி, நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு 2023 ஆம் ஆண்டு முன்கூட்டியே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். அவ்வாறான பின்னடைவு ஏற்பட்டால், ஓராண்டுக்குப் பின்னர் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அது பாரிய பாதகத்தை உருவாக்கும்.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அது தேசிய மட்டத் தேர்தலாக அமையும் என்பதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஓரளவு அனுகூலமான நிலை ஏற்படும். குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆழமாக பிளவுபட்டுள்ள சூழ்நிலையில், அரசாங்கத்திற்கு சவால் விடுவதற்கான அவர்களின் திறன் இன்னும் குறைவாகவே உள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் விரக்தியில் உள்ள போதிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் நாட்டில் இன்னும் உருவாக்கப்படவில்லை.

எனவே, 2024 ஆம் ஆண்டிற்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவது என்பது ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி நடத்தைக்கான சோதனையை விட அரசாங்கத்தின் ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...