தற்போதைய ஒமைக்ரான் அலை தணிந்தவுடன் ஐரோப்பாவில் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரும்

0
203

ஐரோப்பிய நாடுகள் கொரோனாவின் முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குநர் ஹேன்ஸ் க்ளட்ஜ் தெரிவித்துள்ளார். தற்போதைய ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் மார்ச் மாதத்திற்குள் 60 சதவிகிதம் பேருக்கு பரவும் என அவர் குறிப்பிட்டார். இந்த அலை குறைந்தவுடன் மக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் தொற்று பாதிப்பு மிகவும் குறைந்துவிடும் என அவர் கூறினார்.

டெல்டா வகை கொரோனாவைவிட ஒமைக்ரான் வகை தொற்றின் பாதிப்பு குறைவாக இருப்பதாக கூறிய அவர் பெருந்தொற்று என்ற நிலையிலிருந்து சளி போன்ற பருவ நோயாக மாறக்கூடும் என் குறிப்பிட்டார். எனினும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் ஹேன்ஸ் கிளட்ஜ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here