ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.