பாரிய விபத்து இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

0
145

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சரும் இன்னும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்தில் உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரி ஜெயக்கொடி என்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் எனவும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here