இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் மரணம்! நடந்தது என்ன?

0
102

இசைஞானி இளையராஜாவின் மகள் திருமதி. பவதாரணி காலமானார்.

கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெற இலங்கை தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை பவதாரிணி உயிரிழந்துள்ளார்.

வசீகரிக்கும் காந்த குரலுக்கு சொந்தமான இவர் பாடிய அனைத்துமே ஹிட் பாடல்கள் தான்.

ராமர் கோவில் திறப்பு விழாவிலிருந்து இலங்கையில் நடக்க இருந்த இசைநிகழ்வுக்காக இளையராஜா வந்திருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோரின் அன்பு சகோதரியும், கங்கை அமரனது பெறாமகளும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோரது உறவினருமாவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here