ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம்!

0
218
Sri Lanka's ousted Prime Minister Ranil Wickremesinghe looks on during a parliament session in Colombo, Sri Lanka December 5, 2018. REUTERS/Dinuka Liyanawatte

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஜன.26) சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது.

பிற்பகல் 04.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த சர்வகட்சி கூட்டத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாடாளுமன்ற சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஒருமித்த கருத்தை எட்டுவது மற்றும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2022 டிசம்பர் 13 அன்று கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று அழைக்கப்பட்டது. அதில் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டது. இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இந்த விவகாரங்கள் குறித்து மேலும் விவாதிக்கப்பட்டு அவர்களுக்குள் இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here