அதிவேக வீதியில் மற்றும் ஒரு பயங்கர விபத்து, வெளிநாட்டவர் பலி

0
154

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடவத்தைக்கும் கெரவலபிட்டியவிற்கும் இடையில் 27வது கிலோ மீற்றர் பகுதியில் ஆஸ்திரிய குடும்பம் சென்ற சொகுசு வான் ஒன்று லொறியுடன் மோதியதில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் schusccr woifgamg ஆவார். அவரது தாயார் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்த போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அதுருகிரிய அதிவேக நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here