2023இல் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு 7 பில்லியன் லாபம் கிடைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கூறுகிறார்.
இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் 2023 ஆம் ஆண்டு திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபா பங்களிப்பாக வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபா ஈவுத்தொகை வழங்கப்பட்டதாகவும், அதன்படி 2023 ஆம் ஆண்டு 3 பில்லியன் ரூபா ஈவுத்தொகை ஏற்கனவே திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.