இரு கட்சித் தலைவர்கள் சந்திப்பு

0
75

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடலொன்றுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவ்வாறான அழைப்பு எதுவும் இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்கு உரிய முறையில் வரவில்லை எனவும் அவ்வாறு அழைப்பு வந்தால் அதனை பரிசீலிக்க தயார் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அண்மையயில் தெரிவித்திருந்தார்.

இன் நிலையிலையே குறித்த சந்திப்பு யாழ் நல்லூரில் உள்ள சிவஞானத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் பங்குபற்றியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here