சனத் நிஷாந்தவின் பாதுகாப்பாளராக கடமையாற்றி உயிரிழந்த கான்ஸ்டபிளின் குடும்பத்திற்கு 15 இலட்சம் ரூபா நன்கொடை!

0
147

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பாளராக கடமையாற்றி மரணித்த பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடியின் குடும்பத்திற்கு 15 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜன்டாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here