Saturday, December 28, 2024

Latest Posts

அரசியல் கைதிகளை சிறையில் சந்தித்த சாணக்கியன்!

கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நேற்று மேற்கொண்டார்.

அதன் போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வைத்துள்ள கைதிகளை நேரடியாக சந்தித்த பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த திடீர் சந்திப்புக்கான காரணம் சுமார் பத்து நாட்களுக்கு முன்னராக பிரதீபன் என்பவரை வெளியில் இருந்து வந்த சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகள் என்று கூறப்படுபவர்கள் இவரை தாக்கியிருந்தார்.

அவரது நலனை விசாரிக்கும் நோக்கில் சென்றிருந்தேன். முக்கியமாக வெளியில் இருந்து வந்து அவ் தாக்குதலை மேற்கொண்டவர் கடந்த காலத்தில் இராணுவத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதி மற்றும் சிறைச்சளைகளுக்கான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச என்பவருக்கும் அறிய தந்திருந்தேன். கைதியை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமானது.

ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடிய அரசியல் கைதிகள் கற்பளித்தோ, கொள்ளை அடித்தோ அல்லது போதைப்பொருள் கடத்தியோ சிறைக்கு வந்தவர்கள் அல்ல. ஆனால் இவற்றை செய்தவர்கள் வெளியில் சில அரசியல் தலைவர்களாகவும் குறிப்பாக ஓட்டுக்குளுக்களை சேர்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் கூட உள்ளார்கள் நாம் அவர்களையும் இவர்களையும் ஒப்பிட முடியாது இவர்களின் பாதுகாப்பு அரசின் பொறுப்பாகும்.

இவ் சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் மிகவும் கவனமான முறையில் தங்களை நடாத்துவதாகவும் வெளியில் இருந்து வந்தவர்களே இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதனை பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுதித்தியிருந்தார்கள்.

இவ் சம்பவம் தொடர்பான விசாரணையை இவ் சிறைச்சாலை பொறுப்பதிகாரி கூறியிருந்தார். இங்கு எட்டு கைதிகள் மொத்தமாக உள்ளார்கள் ஆனால் இவர்களில் நால்வரை பொது மன்னிப்பில் உடனயாக விடுதலை செயப்படகூடிய சூழல் உள்ளது ஆனால் ஜனாதிபதி பல சாட்டுக்கள் சொல்லிக் கொண்டு வருகின்றார்.

ஜனாதிபதியை ஆதரிப்பவர்கள் அவரது துதி பாடுபவர்கள் இவர்களுக்கான விடுதலைக்கு வலியுறுத்த வேண்டும். பாரிய குற்றம் செய்த கைதிகளுக்கே பிணை மற்றும் விடுதலை கிடைக்கும் போது இவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது வருந்தத்தக்கது.

அதில் இரு சிறைக் கைதிகள் 28 வருடங்களாக சிறையில் உள்ளார். இவர்களுக்கு இவ் வழக்கு முடியும் வரை பிணையில் விட வேண்டும். இவர்களை 28 வருடமாக இவர்களை துன்பப்படுத்தி அதில் இன்பம் அனுபவிப்பவர்களை எவ்வாறு கூறுவது.

எமக்கான தீர்வினைத்தான் தருகின்றார்கள் இல்லை இவர்களின் விடுதலையாவது உறுத்திப்படுத்துங்கள். இவர்களை வைத்து பலர் அரசியல் செய்கின்றார்கள் தனவந்தர்களாக உள்ளார்கள் அவர்கள் ஒன்றிணைத்து இவர்களது விடுதலைக்கு பாடுபடவேண்டும். எனது குரல் மற்றும் எனது சேவைகள் என்றும் ஒடுக்கப்படும் எம் மக்களுக்கனதாக விடுதலைக்கானதாக இருக்கும் என தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.