எமது சுதந்திர கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய குமார வெல்கமவுக்கும் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (28) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அவர் தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.