சாந்தனின் உடல்நிலை – இந்திய இலங்கை அரசாங்கங்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

Date:

சாந்தனின் உடல் நிலையை கருத்தில்கொண்டும் இந்த அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்திய அரசும் மத்திய அரசும் தமிழக அரசும் இலங்கை அரசும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாக சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டபோதும் அவர்கள் சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டு சிறைக்கைதிகள் போல தமது வாழ்வை அனுபவித்து வருகின்றார்கள்.இவர்களில் இலங்கையை சேர்ந்தவர்கள் தாங்கள் இலங்கைக்கு சென்று குடும்பத்தவர்களுடன் இணைந்து வாழகோரிக்கை விடுத்துள்ள போதிலும் இன்றுவரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் சாந்தன் குடும்பத்தினரின் வேண்டுகோளிற்கு இணங்க தமிழ்தேசிய மக்கள் முன்னணி மூன்றாம் திகதி இந்திய துணைத்தூதுவரை சந்தித்த இந்திய உயர்நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து வாழவழிசெய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்த நிலையில் சுகயீனம் காரணமாக சாந்தனின் உடல்நிலை மோசமடைந்துள்ளமையானது அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் பாரிய அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சாந்தனின் உடல் நிலையை கருத்தில்கொண்டும் இந்த அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்திய அரசும் மத்திய அரசும் தமிழக அரசும் இலங்கை அரசும் உடனடியாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரை ஆபத்தான நிலையிலிருந்து மீட்டெடுத்து இலங்கைக்கு மீளத்திரும்பி குடும்பத்தினருடன் இணைந்து வாழ்வதற்கு ஆவணம் செய்யவேண்டும் எனவும் குறித்த வழக்கோடு சம்பந்தப்பட்டு உச்சநீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த ஏனையவர்களும் தங்கள் குடும்பங்களோடு இணைந்து வாழ காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவசரமான வேண்டுகோளை விடுக்கின்றோம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...