சோமாலிய கடற் கொள்ளையர்கள் பிடியில் இருந்த இலங்கை அரசு மீனவர்கள் மீட்பு

Date:

சோமாலிய ஆயுததாரிகள் குழுவின் பிடியிலிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட மீனவர்கள் Seychelles நாட்டின் தலைநகருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினர் தலையீட்டுடன் Seychelles பாதுகாப்பு தரப்பினர் மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

ஆயுததாரிகள் குழுவின் மூவர் Seychelles பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

‘Lorenzo Putha 4’ என்ற இந்த மீன்பிடிப் படகு கடந்த 12 ஆம் திகதி திக்கோவிட்ட பகுதியில் இருந்து தனது முதலாவது கடல் பயணத்தை மேற்கொண்டிருந்தது.

இதில் சிலாபம் மாரவில பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களே கடற்றொழிலுக்கு சென்றிருந்தனர்.

அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...