இலங்கையில் பாரிய வங்கிக் கொள்ளை!

0
330

(NDB) தேசிய அபிவிருத்தி வங்கியில் 13.2 பில்லியன் ரூபாய் மோசடி உள்ளக ஊழியர்களினால் மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் பாரியளவு நிதி இழப்பு ஏற்படக்கூடும் என்றும் ஆனால் வாடிக்கையாளர்களின் வைப்புக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

NDB வங்கி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மத்திய வங்கி ஆரம்பகட்ட மதிப்பீட்டை நடத்தியுள்ளது. வங்கியின் மூலதனப் போதாமை மற்றும் திரவத்தன்மை விகிதங்கள் (Liquidity ratios) குறைந்தபட்ச ஒழுங்குமுறைத் தேவைகளுக்கும் அதிகமாகவே உள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கி நிலைமையை தொடர்ந்தும் கண்காணித்து வருவதுடன், தேவைப்படின் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும். அத்துடன், தற்போதுள்ள விதிகளின் கீழ் தேவைப்பட்டால் தற்காலிக திரவத்தன்மை ஆதரவை (Liquidity support) NDB வங்கி பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியின் பெறுமதி சுமார் 13.2 பில்லியன் ரூபாய் என NDB மதிப்பிட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டுப் பிரிவுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் சில ஊழியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

வாடிக்கையாளர் நிலுவைகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், வங்கியின் செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி தொடர்வதாகவும் மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here