பெலியத்த ஐவர் படுகொலை: மேலும் இரு பெண்கள் கைது

0
170

பெலியத்த பொலிஸ் பிரிவில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கடந்த 22ஆம் திகதி ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (29) காலை ரத்கம பிரதேசத்தின் ஹக்மன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே, குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், பூஸா பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்கள் என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும், குறித்த இரு பெண்களில் ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளில் கராப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து பபூஸா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here