ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணிமீது நடத்தப்பட்ட கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிகார் எம்.பிகள் உட்பட காயமடைந்தவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று பார்வையிட்டார்.
மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் – 2024” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று (30) பிற்பகல் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா அருகில் முன்னெடுத்த எதிர்ப்புப் பேரணி மீதே பொலிஸார் இவ்வாறு தாக்குதல் நடத்தியிருந்தனர்.