நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு துண்டு நிலத்தில் உரிமை இருக்க வேண்டும் எனவும், சில அரசியல் நயவஞ்சகர்கள் இதற்கு எதிராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்நாட்டில் பாடசாலை செல்லும் சகல மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டெப்லெட் உபகரணம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நவீன கல்வியில் வெற்றி பெற வேண்டுமானால் இது இன்றியமையாதது எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் அனைத்தையும் சிறப்பாக செய்யவே ஆட்சிக்கு வந்தது என கூறிய எதிர்க்கட்சித் தலைவர், சிறப்பாகச் செயல்பட்டதன் பலனை நாடு இன்று அனுபவித்து வருவதாகவும் அவர் கூறினார்.
வீடு வீடாக எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் நிலையை நாடு எட்டியுள்ளது என தெரிவித்த அவர்,விவசாயிகளைக் கூட இந்த அரசாங்கத்தாலயே முற்றாக அழிந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
மிஹிந்தலை திரப்பனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
நாட்டில் டிஜிடல் அரசாங்கத்தை உருவாக்க ஆட்சிக்கு வந்த அரசாங்கம், நள்ளிரவில் நாட்டின் அரச சொத்துக்களை,அரச வளங்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யும் நிலைக்கு வந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.