போராட்டம் முடியவில்லை – இனி புது ஆரம்பம் – வௌியே வந்த வசந்த சூளுரை

0
88

கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முதலிகே மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று ரத்து செய்ததுடன், அந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து அவரை விடுவித்தது.

இதற்கிடையில், அவரது விடுதலைக்காக பொதுமக்களால் கையொப்பமிடப்பட்ட 12,000 க்கும் மேற்பட்ட பிரமாணப் பத்திரங்களை சட்டமா அதிபரிடம் வழங்கவும் அவரது வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்தனர்.

போராட்டம் முடியவில்லை என்றும் இனி புது ஆரம்பம் என்றும் கூறிய வசந்த முதலிகே, நாட்டு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை எனவும் கூறினார்.

தன்னை சிறையில் வைத்து கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளை விரைவில் பகிரங்கப்படுத்த உள்ளதாகவும் வசந்த முதலிகே தெரிவித்தார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய முழுமையான அறிக்கையை கீழே உள்ள காணொளியில் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here