கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்தவினால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 200 மில்லியன் ரூபா நிதியைச் செலவிட்டு 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரையும் விடுவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.