13வது திருத்தம் வேண்டாம் – ஜனாதிபதியை ஆசிர்வதித்து அதிர்ச்சி கொடுத்த மகாநாயக்க தேரர்கள்!!

0
89

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

முதலில் மல்வத்து மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து நலம் விசாரித்து ஆசி பெற்றார்.

வணக்கத்திற்குரிய மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியை ஆசீர்வதித்ததுடன் மல்வத்து மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரருக்கு ரணில் விக்கிரமசிங்க விசேட நினைவுப் பரிசை வழங்கி வைத்தார்.

அஸ்கிரி மஹா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி, அஸ்கிரியக் உயர்பீடத் தலைவர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடினார்.

இதேவேளை, நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள கருத்து நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளதாக மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மற்றும் அது தொடர்பான விடயங்கள் வழங்கப்பட்டுள்ளமை நாட்டில் பிளவுகளுக்கு மேலும் வழி வகுக்கும் எனவும் மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமானது நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தக் கூடும் என்பதை உணர்ந்து அதனை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து முன்னைய ஜனாதிபதிகள் அனைவரும் தவிர்த்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here