பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸில் ஏற்கனவே கலந்துகொண்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் காணலாம். இந்தப் போட்டியில் வனிதா, சினேகன், பாலாஜி முருகதாஸ், அபிராமி, ஜுலி, நிரூப், அபிநய், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
நடிகை கஸ்தூரி கடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் நீங்கள் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த கஸ்தூரி, எனக்கு குடும்பம் இருக்கிறது. செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கிறது. பணத்துக்காக போலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவசியம் இல்லை. என்று கடுமையாக தெரிவித்துள்ளார்.