A/L வகுப்புக்களுக்கு தடை,கொவிட் தொற்றுக்கு உள்ளான மாணவர்களுக்கு விசேட சலுகை!

Date:

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்ட பயிற்சி வகுப்புக்கள் மற்றும் மேலதிக வகுப்புக்களுக்கு ​நேற்று (01) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறும்.
இதற்கமைவாக துறை சார் விரிவுரையாளர்கள், கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்களை நடத்துவதும், பரீட்சையை இலக்காகக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுவதும், பகிர்ந்தளிப்பதும், இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவதும், பரீட்சை இடம்பெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் இவ்வாறான வினாத்தாள்கள் வழங்கப்படுமென சுவரொட்டிகள் மற்றும் பெனர்கள் மூலம் அறிவிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்கு விதிகளை மீறுவோர் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது பரீட்சைத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும்.


இதேவேளை, கொவிட் தொற்றுக்கு உள்ளான மாணவர்களுக்கு வசதியாக 29 வைத்தியசாலைகளில் உயர்தரப் பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொவிட் தொற்றுக்கு உள்ளான மாணவர்கள் இந்த பரீட்சைமத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...