பாகிஸ்தானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

0
174

வெளிவிவகார இராஜாங்க அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான ஹினா ரப்பானி கர் இன்று (பிப்ரவரி 03) இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மும்தாஸ் சஹ்ரா பலோச் கூறுகையில், இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவில் கௌரவ விருந்தினராக அமைச்சர் பங்கேற்பார்.

சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதுடன், அவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியையும் சந்திக்கவுள்ளதாக அவர தெரிவித்துள்ளார்.

வரலாற்று ரீதியான உறவுகளை பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் உள்ளதாகத் தெரிவித்த செய்தித் தொடர்பாளர், இராஜாங்க அமைச்சரின் விஜயமானது இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வுகளை மேம்படுத்துவதற்கும் இந்த கடினமான காலங்களில் இலங்கைக்கு பாகிஸ்தானின் ஆதரவை வெளிப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்றும் கூறினார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here