10வது சாரணர் ஜம்போரி உத்தியோகபூர்வ இணையம் ஆளுநரால் அங்குரார்ப்பணம்

0
80

10வது தேசிய சாரணர் ஜம்போரிக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

தேசிய சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் சட்டத்தரணி ஜனப்ரித் பெனாண்டோ உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து சாரணர்களை ஊக்குவிக்கும் வகையில் 10வது சாரணர் ஜம்போரிக்கான இணையத்தளத்தை திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் வைத்து கிழக்கு மாகாண  ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இம்மாதம் 21ம் திகதி முதல் 26ம் திகதி வரை 10வது தேசிய சாரணர் ஜம்போரி திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

சாரணர் ஜம்போரியில் உலக அளவில் 10,000 சாரணர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்போரிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here