அநுர குழு இன்று இந்தியா பயணம்

0
217

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவொன்று இன்று இந்தியா செல்லவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், NPP செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் NPP தலைவருடன் செல்லவுள்ளனர்.

அவர்கள் இந்தியாவில் அதிகாரப்பூர்வ சந்திப்புகளை நடத்த உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here