13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மகாநாயக்க தேரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு அறிவித்ததையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து அது பற்றி விளக்கமளித்ததாகவும் அவர்கள் எதிர்க்கவில்லை என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நாடு பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைவதற்கு 13வது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், எனவே இந்த திருத்தத்தை விரைவில் அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
N.S