எரிபொருள் நிலையங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டில்

Date:

இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து உருவாகியுள்ள வாகன நெரிசலும் நீண்ட வரிசைகளையும் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் தேவையற்ற பதற்றத்தால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கடும் வாகன நெரிசல் உருவாகியுள்ளது என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு பொறுப்பிலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வாகன வகைக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவு எரிபொருள் வழங்கப்படும் என்பதால் பதற்றமின்றி செயல்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்தி சாலை ஒழுங்கை பேணுவதற்காக அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது நிலவும் நெரிசலை குறைத்து, பொதுமக்களுக்கு தேவையான சேவைகள் இடையூறு இல்லாமல் கிடைக்கச் செய்வதே இந்த பொலிஸ் நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்று முதல் பஸ்களைச் சேவையில்

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின்...

அரச அலுவலகங்கள் இன்று திறப்பு

அரச அலுவலகங்கள் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுநாள்...

வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய் கொக்கெய்ன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான...

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...