தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை இன்று (7) பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதித்துள்ளார்.
ரம்புக்வெல்லவை பாராளுமன்ற கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்குமாறு அவரது செயலாளர் ஒருவர் விடுத்த கோரிக்கையை அடுத்து சபாநாயகர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
இதன்படி, கெஹலிய ரம்புக்வெல்லவை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருமாறு சார்ஜன்ட் குஷான் ஜயரத்ன சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இதனால் எதிர்வரும் பாராளுமன்றக் கூட்டங்கள் அனைத்திற்கும் கெஹலிய ரம்புக் வெல்ல அழைக்கப்படுவார்.
இதனிடையே, அமைச்சர் பதவியில் இருந்து ரம்புக்வெல்ல விலகியுள்ளதால், அவருக்கு ஆளும் கட்சியின் பின்வரிசையில் ஆசனம் ஒன்று நாடாளுமன்றத்தில் தயார் செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.