மினுவங்கொட பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும், உயிரிழந்தவர் 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.