ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தியை மூளைச்சலவை செய்துள்ளார் அதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இந்திய தலைவர்களை சந்திக்க சென்றுள்ளார் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆதிக்கம் குறித்து உரையாற்றிய தேசியமக்கள் சக்தியின் தலைவர்கள் இதன் காரணமாகவே இந்தியா சென்றுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பழைய ஆடைகளை அணிந்தவர்கள் கோட் அணிகின்றனர் இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம் இது ரணில் விக்கிரமசிங்க மூளைச்சலவை செய்ததால் ஏற்பட்ட மாற்றம் எனவும் அர் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்துடன் இணைந்து செயற்படுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் எவ்வாறு அரசாங்கத்தை விமர்சித்தார்கள் என்பது எங்களிற்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.