அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தம் இன்று (பிப்ரவரி 09) காலை 8.00 மணியுடன் முடிவுக்கு வந்தது.
அரசாங்கத்தின் புதிய வருமான வரி அதிகரிப்பு, நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யத் தவறியமை மற்றும் அதிகரித்து வரும் ஊழல் மற்றும் முறைகேடு சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (பிப்ரவரி 08) காலை ஆரம்பிக்கப்பட்டது. .
இன்றுடன் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும், தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின், எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகளை கடுமையாக்க எதிர்பார்த்துள்ளதாக, GMOAவின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
N.S